www.garudabazaar.com

BBUltimate: பிக்பாஸ் வீட்டில் நிரூப் சொன்ன அதிர்ச்சி தகவல்.. இவருக்கு பின்னால இப்படி ஒரு சோகமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 22, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது.

Nirup reveals sad story behind his mother BBUltimate

இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகினர். இதனைத் தொடர்ந்து, அபினய் மற்றும் ஷாரிக் ஹாசன் எலிமினேட் அகினர்.

Also Read: “உதயநிதி அண்ணா தான் ரோல்மாடல்”.. வெற்றிபெற்று கெத்து காட்டும் 22, 23 வயது திமுக பெண் வேட்பாளர்கள்..

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்நிலையில் தான் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் கொடுத்து, சில நேரங்களில் சில மனிதர்கள் என்கிற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த தேவதை மற்றும் சாத்தான் பெயரை குறிப்பிட வேண்டும்.

தேவைதைகள் யார்? சாத்தான்கள் யார்?

முன்னதாக இது தொடர்பாக பேசிய பாடலாசிரியர் சினேகன் தம்முடைய தயார்தான் தம்முடைய தேவதை என்றும், தம்முடைய பூஜை அறையில் கூட சாமி படத்துக்கு பதிலாக தாயாரின் புகைப்படம் இருக்கும் என்றும் எமோஷனலாக கூறுகிறார்.

Nirup reveals sad story behind his mother BBUltimate

இதேபோல் ஜூலி கூறும்பொழுது,  “அடுத்தவர்களின் சாப்பாட்டில் மண்ணை அள்ளி போடுபவர்கள் அனைவருமே சாத்தான்கள் தான்.. நான் யார் பிழைப்பையும் இதுவரைக்கும் கெடுத்தது இல்லை, எனவே நானே என்னை தேவதை!” என்று கூறிக் கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

நிரூப் நந்தகுமார் ..

இதில் தான் நிரூப் தம் தாய் குறித்து கூறியுள்ள உருக்கமான தகவல் பலரது இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இருந்த யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலரான நிரூப் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டார். கிராண்ட் ஃபினாலே வரை சென்று எலிமினேட் ஆன நிரூப், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக போட்டியாளர்.

இவருக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா?

இந்நிலையில்தான் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில், தற்போது நிரூப், தன் வாழ்க்கையில் சந்தித்த சாத்தான் பற்றி கூறும்போது,  “இப்ப வரைக்குமே, அம்மா ஒரு schizophrenia நோயாளி தான். அம்மாவின் இந்த மெடிக்கல் கண்டிஷனை தான் நான் சாத்தானாக பார்க்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார். schizophrenia என்பது ஒரு வகையான மன சிதைவு நோய்.

Nirup reveals sad story behind his mother BBUltimate

நிரூப் பிக்பாஸ் வீட்டில், என்ன தான் சிரீயஸாக இருந்தாலும், அவ்வப்போது ஜாலியாகவும்,மெச்சூரிட்டியுடனும், சில சமயம் காட்டுத்தனமாகவும் திகழும் நிரூப்க்கு பின்னால் இப்படி ஒரு சோகம் இருக்கிறதா? என ரசிகர்கள் உருக்கமாக கேட்டு வருவதுடன், நிரூப்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

24 மணி நேரமும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்களும் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்கள் 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது.

Nirup reveals sad story behind his mother BBUltimate

அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “என் அப்பா சாத்தான்” .. Bigg Boss வீட்டில் போட்டு உடைத்த சுருதி! எந்த மகளுக்கும் இந்த நெலமை வர கூடாது - கலங்கும் சுருதி ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Nirup reveals sad story behind his mother BBUltimate

People looking for online information on BBUltimateTamil, BiggBossOTT, Biggbosstamil, BiggBossUltimate, Niroop, Nirup will find this news story useful.