www.garudabazaar.com

சினிமாவில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’-யின் சகோதரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த தேவரகொண்டாவும் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Vijay Deverakonda's Brother Anand Deverakonda making his acting debut

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. பெருமளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள முன்னணி ஹீரோக்களில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர்.

தற்போது அவருக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே ஒருவர் திரைத்துறையில் அறிமுகமாகிறார். தெலுங்கில்  ‘Dorasani’ என்று தலைப்பிடப்பட்டுள்ள காதல் கதையம்சத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக அறிமுகமாகிறார்.

டாக்டர். ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். 80 மற்றும் 90களில் நடந்த உண்மை காதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படத்தை கே.வி.ஆர்.மகேந்திரா இயக்குகிறார்.

பிரசாந்த் இசையமைக்கும் இப்படத்திற்கு சன்னி கூரபாடி ஒளிப்பதிவு செய்கிறார். யாஷ் ரங்கினேனி மற்றும் மதுரா ஸ்ரீதரின் பிக் பென் சினிமாஸ், மதுரா எண்டர்டெய்ன்மென்ட் பேனரில் இப்படம் தயாராகிறது. இது விஜய் தேவரகொண்டா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.