www.garudabazaar.com

‘தோழர் Dolo 650’ இயக்குநர் பகிர்ந்த பிரபல கவிதை!.. இது இன்னுமா trend ஆகிட்டு இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vasantha Balan: வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்த பாலன்,

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

வசந்த பாலன் படங்கள்

அண்மையில், தமது படங்கள் குறித்து தமது சமூகவலைதளத்தில் குறிப்பிட்டிருந்த இயக்குநர் வசந்த பாலன், “சட்ட சிக்கல்களால் இன்னும் வெயிலும் அங்காடித்தெருவும் எந்த Ott platform மிலும் இல்லை. இப்போது அங்காடித் தெரு திரைப்படம் மட்டும் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரனின் பிரத்தியேக சேனலில் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

வசந்த பாலன் பகிர்ந்த மனுஷ்யபுத்திரனின் கவிதை

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

தமது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இயக்குநர் வசந்த பாலன், பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘தோழர் டோலோ 650’ என்றும் தொடங்கும் பிரபலமான கவிதை ஒன்றை பகிர்ந்து, “நேற்றிரவு தவிர்க்க முடியாமல் dolo 650 எடுத்து தான் உறங்கி போனேன்...love u dolo 650” என்று தமது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

Dolo 650 மாத்திரை அதிக அளவு விற்பனை

இந்தியாவில் கொரோனா காலத்தில் இந்த Dolo 650 மாத்திரை விற்பனை தற்போது அதிக அளவு நடந்துள்ளது. காய்ச்சல், உடல்வலி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் உண்டாகும் சிறிய உடல் வலிக்கு மருந்தாக என பல்வேறு வகையிலும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

குசும்புக்கார மச்சினிச்சிங்க.. சிக்கிய Cook With Comali ‘கனி’-யின் கணவர்! Viral அட்ராசிட்டி வீடியோ

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

டோலோ 650.. விற்பனையில் 2-ஆம் இடம் ..

இவை அனைத்தும் முறையான மருத்துவர்களின் பரிந்துரைத்தலின்பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.  இந்த டோலோ 650 தான் கடந்த 2020 முதல் கடந்தாண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டங்களில் இந்தியாவில் 350 கோடி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆம், இந்தியாவில் விற்பனையாகும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளில் 2021ஆம் ஆண்டில் ரூ.307 கோடி வருமானம் பெற்று  2ஆம் இடத்தை இந்த டோலோ 650 மாத்திரை பிடித்துள்ளது.

RRR: ஸ்டெப்பு முறையா விழணும்!.. பிரபல நடிகை.. ராம்சரண்-உடன் நாட்டு நாட்டு டான்ஸ்! வீடியோ

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

‘தோழர் டோலோ 650’ கவிதை

இந்நிலையில் தான் மனுஷ்யபுத்திரன் சமீபத்தில் எழுதியிருக்கும் ‘தோழர் டோலோ 650’ என்று தொடங்கும் தன் கவிதையில், 

“தோழர் டோலோ650,

நலமா?

நாம் சேர்ந்திருக்கத்தொடங்கி

பல நாட்களாகிவிட்டன

அது என்ன மாயம் என்று தெரியவில்லை

இன்றோடு உம்மை நான்

பிரிந்துவிடலாம் என

நினைக்கும்போதெல்லாம்

என் உடல் மறுபடி காயத்தொடங்குகிறது

தோழர் டோலோ650

நீங்கள்தான் இப்போது

இந்த பூமிகிரகத்தை

கொள்ளைநோயிலிருந்து

காப்பாற்ற வந்த மகா சக்தி இல்லையா?

உங்களது உருண்டை வடிவத்தைப் பார்த்தால்

எனக்கு சிரிப்பு வருகிறது

நீங்கள் சுற்றப்பட்டிருக்கும் பேக்கிங்கூட

கவர்ச்சியாய் இல்லை

ஆனால் நீங்கள் எங்கெங்கும் நிரம்பியிருக்கிறீர்கள்

மூன்று மணி நேரத்தில்

பரிசோதனைகளுக்காக

பதினேழாயிரம் ரூபாய் செலுத்தினேன்

கையில் ஒரு டோலோ 650 யை

கொடுத்து அனுப்பி விட்டார்கள்

என்ன செய்வதென்று தெரியாமல்

மருத்துவமனை வாசலில்

நெடு நேரம் நின்றிந்தேன்

தோழர் டோலோ 650

மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு

மிகச்சிறிய தீர்வுகள்தான் இருக்கின்றன என்பதைப்

புரிந்துகொள்ள

நீங்கள் எனக்கு உதவியாக இருந்தீர்கள்.

என் வாழ்வின் எல்லா சாகசங்களும்

எல்லாக் காதல்களும்

ஒரு டோலோ650யில்

சம நிலைக்கு வருகின்றன

காய்ச்சல் இருப்பதுபோலும் இருக்கிறது

இல்லாததுபோலும் இருக்கிறது

தோழர் டோலோ650

நான் என்ன செய்யவேண்டும் என

நீங்களே  முடிவு செய்யுங்கள்

12.1.2022

இரவு 10.08

மனுஷ்ய புத்திரன்.”

என்று எழுதியுள்ளார்.  இதனைத் தான் இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துள்ளார்.

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

அடுத்த திரைப்படங்கள்..

இயக்குநர் வசந்த பாலன், இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பிலான ஜெயில் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பிரபல நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை தமது நண்பர்களுடன் இணைந்து அர்பன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கி வருகிறார்.

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

தொடர்புடைய இணைப்புகள்

Pouplar director shares Manushya Puthiran Dolo 650

People looking for online information on Covid19, Dolo 650, Dolo 650 tablets, Vasanta Balan, Vasantha Balan will find this news story useful.