www.garudabazaar.com

தல அஜித்தின் வலிமை..! படத்தின் எடிட்டர் பகிர்ந்த வைரல் புகைப்படம்! புதிய தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் "வலிமை" திரைப்படம் உருவாகி வருகிறது.

Valimai Update Editor Vijay Velu Kutty Shares Viral Picture

வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.

Valimai Update Editor Vijay Velu Kutty Shares Viral Picture

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 33 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

Valimai Update Editor Vijay Velu Kutty Shares Viral Picture

வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வலிமை படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து வருவதாக அறிவித்து, தான் வேலை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Valimai Update Editor Vijay Velu Kutty Shares Viral Picture

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Update Editor Vijay Velu Kutty Shares Viral Picture

People looking for online information on Ajithkumar, Valimai, Valimai update, Vijay Velukutty will find this news story useful.