www.garudabazaar.com

தல அஜித்தின் தெறி மாஸான புதிய கெட்டப்..! வைரலாகும் LATEST புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. 

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.  வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டன. இதனை அடுத்து தல அஜித் பைக் பயணத்தை வட இந்தியா முழுவதும் மேற்கொண்டார்.தாஜ்மஹால், ராஜஸ்தான் ஜெய்ப்பூர் என 35க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்றார்.

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

அவ்வப்போது தனது கெட்டப்பை மாற்றுவது தல அஜித்தின் வாடிக்கை,  படத்தின் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சோதனை முயற்சியாக பல ஸ்டைல்களில் வலம் வருவார் தல. இந்நிலையில் தலயின் புதிய கெட்டப் போட்டோ வெளியாகி உள்ளது. அதில் காதில் கடுக்கனுடன் தல அஜித் தோன்றியுள்ளார்.

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

ஏற்கனவே தல அஜித், தான் நடித்த தீனா, அசல், வேதாளம் படங்களில் கடுக்கனுடன் தோன்றியுள்ளார். இந்த கெட்டப் தலயின் அடுத்த பட தோற்றமாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவதானிக்கின்றனர்.

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajithkumar New Getup with Stud Image went Viral

People looking for online information on Ajith61, Ajithkumar, AK61, Thala, Thala Ajith Kumar, Thala61, Valimai will find this news story useful.