www.garudabazaar.com

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிக்கும் PAN INDIA புஷ்பா படத்தின் மிரட்டலான டிரெய்லர் ரிலீஸ்! எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா'.

Allu Arjun Pushpa The Rise Trailer on DEC 6th,2021

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions கைப்பற்றி உள்ளது.

Allu Arjun Pushpa The Rise Trailer on DEC 6th,2021

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ரிலீசை முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

Allu Arjun Pushpa The Rise Trailer on DEC 6th,2021

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

Allu Arjun Pushpa The Rise Trailer on DEC 6th,2021

People looking for online information on Allu Arjun, Fahad Faasil, Pushpa, Rashmika will find this news story useful.