www.garudabazaar.com

LATEST: தல அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்! டிவிட்டரில் பகிர்ந்த வலிமை பட நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Thala Ajith Kumar Latest Whatsapp Status from Valimai Team

அதனைத்தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.

Thala Ajith Kumar Latest Whatsapp Status from Valimai Team

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 33 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

Thala Ajith Kumar Latest Whatsapp Status from Valimai Team

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ராஜ் ஐயப்பா தனது டிவிட்டர் பக்கத்தில் தல அஜித்தின் அனுமதியுடன் அவருடைய வாட்ஸப் ஸ்டேட்டஸை பகிர்ந்துள்ளார். அதில் தல அஜித் "ஏழை, மிடில் கிளாஸ், பணக்காரன் என்பது ஒருவரின் பொருளாதாரத்தை குறிக்கும், குணத்தை அல்ல. அனைத்து சமுதாயத்திலும், நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர். ஆதலால், ஒருவரை அவரின் பொருளாதாரத்தை வைத்து ஒருவரின் குணத்தை தீர்மானிப்பதை நிறுத்துவோம். அனைவரும் விழியுங்கள்!!!" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith Kumar Latest Whatsapp Status from Valimai Team

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thala, ThalaAjith, Valimai will find this news story useful.