இன்ஸ்டாகிராமில் சம்பவம் செய்த நடிகை.. தூக்குங்கடா செல்லத்த.. கொண்டாடிய நண்பர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் பெயர் பெற்றிருந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத்.

Urfi javed celebrates 3m followers in instagram with friends

அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் உர்ஃபி ஜாவேத் கலந்து கொண்டு அதிகம் பிரபலம் அடைந்திருந்தார்.

தொலைக்காட்சி தொடர், பிக்பாஸ் நிகழ்ச்சி என இவை இரண்டையும் தாண்டி, உர்ஃபி அதிகம் பெயர் போனது எதற்காக என்றால், அவர் உடுக்கும் ஆடையின் காரணமாக தான்.

வித்தியாசமான ஆடைகள்..

மிகவும் வித்தியாசமாக அவர் உடுக்கும் ஆடைகளுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உர்ஃபி ஜாவேத் எப்போது பகிர்ந்தாலும், இணையம் முழுக்க அவை வைரலாகும். ஒரு பக்கம் அவருக்கு ஆதரவு இருந்தாலும், மறுப்பக்கம் அவர் உடுக்கும் ஆடைகளைச் சுற்றி சர்ச்சைகளும் உருவாகும். உதாரணத்திற்கு ஒரு முறை பிளாஸ்டிக்கால் ஆன ஆடை ஒன்றை அணிந்து பொது இடங்களில் தோன்றி இருந்தார்.

Urfi javed celebrates 3m followers in instagram with friends

Candy மூலம் உருவான உடை..

இதே போல, ஒரு முறை மலர்களை மட்டுமே உடல் முழுவதும் அணிந்து ஆடை போல தோன்றி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்ததாக Candy மூலம் உருவான உடை என இப்படி ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையத்தில் பகிரும் உர்ஃபி ஜாவேத், சில நேரம் தெரிவிக்கும் கருத்துக்களும் அதிகம் விவாதங்களை ஏற்படுத்தும்.

3 மில்லியன் Followers..

அடிக்கடி இணையத்தில் ஏதாவது ஒரு விஷயத்திற்காக அதிகம் வைரலாகும் உர்ஃபி ஜாவேத், தற்போது நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன்கள் ஃபாலோவர்களை பெற்றுள்ள உர்ஃபி, இதனைக் கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் சேர்ந்து நைட் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளார்.

Urfi javed celebrates 3m followers in instagram with friends

அவரின் நபர் ஒருவர், அலேக்காக உர்ஃபியை தூக்க, அங்கிருந்த அனைவரும் 3 மில்லியன் எனக்கூறி ஆர்பரிக்கின்றனர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள உர்ஃபி ஜாவேத், தன்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

இன்ஸ்டாகிராமில் சம்பவம் செய்த நடிகை.. தூக்குங்கடா செல்லத்த.. கொண்டாடிய நண்பர்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Urfi javed celebrates 3m followers in instagram with friends

People looking for online information on Costume, Followers, Instagram, Urfi Javed will find this news story useful.