MKS Others
www.garudabazaar.com

ஜூலியின் புகாரில் பரபரப்பு Twist வைத்த காதலர்? காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜூலி, கடந்த 2017 மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

twist in biggboss juli complaint on boyfriend police station

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, பார்வையாளர்களாலும் சக போட்டியாளர்களாலும் பெருமளவில் விமர்சனத்துக்குள்ளானர்.

இதனை அடுத்து சில குறும்படங்களில் நடித்த ஜூலி, பின்னர் அம்மன் என்கிற படத்தில் நடித்திருந்ததுடன் பல விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது பேச்சு, லுக் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு, மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதனிடையே ஜூலி, அண்மையில் சென்னை அமைந்தகரையை சார்ந்த மனிஷ் என்பவர் தன்னை 4 ஆண்டுகளாக காதலித்து பல்சர் பைக், தங்க நகைகள், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டும் ரூ.2.80 லட்சம் பண மோசடி செய்துவிட்டும் சென்றதாக சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஜீலியின் ஆண் நண்பர் மனிஷ் என்பவர் ஜீலியின் காதல் பிரேக் அப் ஆனதன் பிறகு ஆறுதலாக இருந்ததாகவும் அப்போது இருவருக்கும் காதல் மலர, எனினும் ஜூலி அவரை தவிர்த்து வந்ததாகவும் மனிஷ் காவல் துறையினரிடத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தன்னுடன் மீண்டும் பேசும்படி மனிஷ் கெஞ்சிய ஆடியோ ஆதாரங்களை அவர் காவல்துறையினரிடத்தில் காட்ட, இதனை அடுத்து ஜூலி, மனிஷின் தொடர் போன் கால்களால் இப்படியான புகாரை அளித்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து, காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை கூறி, இருவரின் பிரச்சனைகளையும் பேசித் தீர்த்துள்ளனர். இதனை அடுத்து அவரவர் வழியில் இருவரும் போக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

twist in biggboss juli complaint on boyfriend police station

People looking for online information on Biggboss juli, Biggboss maria juliana, Biggbosstamil, Julie, Maria Juliana, Vijay Television, Vijay tv, Vijay tv trending will find this news story useful.