www.garudabazaar.com

"கத்தியால குத்திட்டு டாஸ்கா?".. "நீ பண்ணது என்ன?" .. வார்த்தைப் போரில் தாமரை - பிரியங்கா! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவி டிபேட் ஷோ டாஸ்கிற்காக சிபி, அபிஷேக்ம் பிரியங்கா மூவரும் தாமரையை கேள்வி கேட்டு அதனால் சண்டை விளைவதாக பிராங்க் செய்ய, இதில் தாமரைக்கும் - பிரியங்காவுக்குமான சண்டை வலுத்தது. பிறகு இது உண்மையான சண்டையாகவே மாறியது.

priyanka thamarai warof words tv task prank issue biggbosstamil5

அதன்படி, தாமரை சிபியை தங்கப்புள்ள, செல்லப்புள்ள என சொல்வதை குறிப்பிட்டு பிராங்க் பண்ணியதை குறித்து அக்‌ஷரா வருத்தப்பட்டதுடன், அதை தாமரை அக்கா விரும்பவில்லை என தெரிவித்தார். இதேபோல், அப்படி சொன்னால் தான் நீ கோவப்படுவ என பிரியங்கா சொன்னார் என்று அபிஷேக் தாமரையிடம் விளக்கம் சொன்னார்.

ஆனால், “டிராமாவுக்காக நான் பாசமாக இருப்பதைத் தான் கருப்பொருளாக எடுத்துக் கொள்வீர்களா? பின்னர் நான் பெர்சனலாக எடுத்துக் கொள்கிறேன் என முத்திரை குத்துவதா? கத்தியால் குத்திவிட்டு கூட டாஸ்க் என்று சொல்வீர்களா? என் மனதை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என டார்கெட் பண்ணி செய்தது தெரியும்போது நான் ஏன் பாதிப்புக்குள்ளாக்க மாட்டேன்? இதுபற்றி எப்படி கேட்காமல் இருப்பேன்?” என கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன பிரியங்கா, “அப்படியானால் சாய திரவத்தை என் கண்ணாடி குடுவையில் ஊற்றும்போது நிரூப் மற்றும் எனது நட்பை குறிப்பிட்டு விமர்சித்து ஊற்றினாய்.. டாஸ்கிற்காக உன் பாசத்தை நான் கேலிப்பொருளாக்கியதாக கோவப்படும் நீ, அப்போது டாஸ்கிற்காக எங்கள் நட்பை கேலிப்பொருளாக்குவது போல் பேசியது என்ன? அதற்கு பதில் சொல்!” என கேட்டுவிட்டார்.

பிறகு இருவரும் பஞ்சாயத்தை சஞ்சீவிடம் கொண்டு செல்ல, வருண், ராஜூ, நிரூப், சிபி உள்ளிட்டோர் தாமரையை விலக்கி தனித்தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

priyanka thamarai warof words tv task prank issue biggbosstamil5

People looking for online information on Biggboss, BiggBoss5, BiggBossTamil5, Priyanka thamarai fight, Trending, Vijay Television, Vijaytv will find this news story useful.