www.garudabazaar.com

"அத ஏன் நீ கலாய்க்குற?".. முட்டிக்கொண்ட தாமரை - பிரியங்கா..! சண்டையை விலக்கிவிட்ட ஹவுஸ்மேட்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் சக போட்டியாளரை பற்றி, பார்வையாளர்களுக்கு தெரியாத இன்னொரு முகத்தை வெளிக்கொணர வைத்து நிரூபிக்க நினைக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக தற்போது ஒரு புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

im always original thamarai to priyanka biggbosstamil5

இதற்கென பிக்பாஸ் போட்டியாளர்களைக் கொண்டு ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என 2 செய்தி சேனல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ப்ளூ டிவி தொகுப்பாளர்களாக ராஜூ மற்றும் இமான் இருக்கின்றனர். ரிப்போர்ட்டராக அக்‌ஷரா இருக்கிறார். இதேபோல் சிபி, அபிஷேக் தொகுத்து வழங்கும் ரெட் டிவி நியூஸ் சேனலுக்கு பிரியங்கா ரிப்போர்ட்டராக இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கென பிரியங்கா வருணுடன் இணைந்து பிக்பாஸ் வீட்டில் தாமரை நடந்துகொண்டதை நடித்து காட்டினார்.

im always original thamarai to priyanka biggbosstamil5

இதனிடையே இமான் மற்றும் நிரூப் இருவருக்குமிடையேயான கேள்விகளை முன்னதாக பிரியங்கா முன்வைத்தபோதும், அபிஷேக் இமானை கேள்வி கேட்டபோதும் இமான் அண்ணாச்சி, “நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்கிறீர்கள்” என்று குறிப்பிட்டு எழுந்து சென்றார்.

இந்நிலையில் தாமரையை கேள்விகள் கேட்கும்போது, விருப்பப் பட்டால் மட்டும் பதில் சொல்லலாம் என சிபி, தாமரைக்கு சலுகை வழங்கினார்.  இதனால் அபிஷேக்கும் பிரியங்காவும் சிபியிடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து வெடித்த சண்டையில், பிரியங்கா  சிபியிடம்,  “தாமரையிடம் நான் கேள்விகளை கேட்கிறேன், நீ கேட்க தேவையில்லை. உன்னை தங்கப்புள்ள செல்லப்புள்ள என்று தாமரை கொஞ்சுவதால், தாமரையை எதுவும் கேட்காமல் இருக்க முடியாது” என்று கேட்டார்.

அப்போது தாமரை பிரியங்காவிடம், “நான் பாசமாக பேசுவதை நீ ஏன் கலாய்க்குற? நீ மொதல்ல நியாயமா நடந்துக்க. அப்புறம் அடுத்தவனை குறைசொல்லு” என்று சொல்ல, அதற்கு சிபி, “நேரடியாக கேக்குறாங்க சொல்லுங்க!” என்று பிரியங்காவிடம் சொல்கிறார்.

இறுதியில், தாமரையிடம்,  “உன் உண்மையான குணம் வெளியவந்துச்சா?” என்று பிரியங்கா கூற, பதிலுக்கு பிரியங்காவிடம், “நான் எப்பவுமே இப்படித்தான் இருக்கேன். நீ இப்படி இல்ல” என்று கூறினார். இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தபோது, அபினய் உள்ளிட்டோர் விலக்கிவிட்டனர். அதன் பின்னர் இது தாமரையை புண்படுத்த அல்ல, இது விளையாட்டாக ஜோடிக்கப்பட்ட சண்டை என்று அபிஷேக், சிபி மற்றும் பிரியங்கா குறிப்பிட்டு இது ஒரு  ‘நியூஸ் சேனல் டாஸ்க்குக்காக’ செய்த பிராங்க் என்று குறிப்பிட்டனர். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

im always original thamarai to priyanka biggbosstamil5

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Priyanka, Thamarai priyanka fight, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.