மீ டூ: சென்சாரிடம் சிக்கிய இறுதிச்சுற்று நாயகியின் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Irudhi Suttru fame Ritika singh's Me Too film in trouble, CBFC has issues with Title?

பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் விதமாக மீ டூ என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. உலகளவில் கவனம் ஈர்த்த இந்த மீ டூ இயக்கம் இந்திய சினிமாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மீ டூ விவகாரத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அறிமுக இயக்குநர் ஹர்ஷ வர்தன் தமிழில் இயக்கும் இப்படத்தின் நடிகை ரித்திகா சிங் ‘மீ டூ’ பிரச்னையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். தற்போது சென்சாருக்கு சென்ற இப்படம் சில பிரச்னைகளை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் சில வசனங்களுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததால், முன்னதாக மும்பை சென்சார் போர்டின் மறு சீராய்வு குழுவுக்கு அனுப்பப்பட்ட இப்படம் பின் சென்னை மறு சீராய்வு குழுவின் பார்வைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தினை எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சஜீத் குரேஷி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தவிர தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.