'பிரபல' டிவி சீரியல் நடிகை 'ஸ்ரீதேவி அசோக்' வீட்டில் 'குவா குவா'.!.. ரசிகர்கள் வாழ்த்துமழை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக், தமக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அறிவித்திருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TV serial actress sridevi ashok gave birth to baby girl

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி அசோக், தற்போது சன் டிவி ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம், தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர்  நடிகை ஸ்ரீதேவி அசோக். பின்னர், ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து புகழ்பெற்றார்.

TV serial actress sridevi ashok gave birth to baby girl

அதன் பின்னர், இவர் அசோக் சின்தலா என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்புதான் தனது கர்ப்ப கால புகைப்படங்களையும், அதன் தொடர்ச்சியாக வளைகாப்பு நிகழ்வினையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டபோதே ஸ்ரீதேவிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ALSO READ: ‘பாக்கியலட்சுமி’ சீரியல்.. முக்கிய நடிகை திடீர் மாற்றம்!.. களமிறங்கும் பிக்பாஸ் நடிகை இவரா? பரபரப்பு ப்ரோமோ!

அண்மையில் இவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் தான், இப்போது தமக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக ஸ்ரீதேவி அசோக் அறிவித்ததை அடுத்து, சக சின்னத்திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'பிரபல' டிவி சீரியல் நடிகை 'ஸ்ரீதேவி அசோக்' வீட்டில் 'குவா குவா'.!.. ரசிகர்கள் வாழ்த்துமழை! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

TV serial actress sridevi ashok gave birth to baby girl

People looking for online information on Sridevi Ashok, Trending will find this news story useful.