"செம்ம Lucky-ப்பா!".. Cycling போன முதல்வர் ஸ்டாலின்!.. வழியில் 'பிக்பாஸ் நடிகை' எடுத்துக்கொண்ட 'Viral' செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின், அவ்வப்போது சைக்கிளிங் செல்வதில் ஆர்வம் உடையவர்.

biggboss Yashika selfie with CM MK Stalin while cycling

அதற்கு முக்கிய காரணம், அவர் தம் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள எண்ணுபவர். அண்மையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வீடியோக்களில் காண முடிந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் சைக்கிளிங் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து’ நேரம் ஒத்துழைக்காமல் இருந்தது.

இந்நிலையில் தான், ஞாயிற்றுக் கிழமையான ஜூலை 4-ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரை வழியில் சந்தித்த பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், அவரிடம் ரிக்வஸ்ட் செய்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

biggboss Yashika selfie with CM MK Stalin while cycling

முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் செய்த அதே நேரம், அங்கு சைக்கிளிங்கில் வந்த ‘பிக்பாஸ் பிரபல’ நடிகை யாஷிகா ஆனந்த், முதல்வரை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ‘செம்ம லக்கிங்க நீங்க’ என கமண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ALSO READ: ‘பாக்கியலட்சுமி’ சீரியல்.. முக்கிய நடிகை திடீர் மாற்றம்!.. களமிறங்கும் பிக்பாஸ் நடிகை இவரா? பரபரப்பு ப்ரோமோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss Yashika selfie with CM MK Stalin while cycling

People looking for online information on MKStalin, Trending, Yashika Aannand will find this news story useful.