அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயில்.. 200 டன் எடையா? .. தரிசித்த முக்கிய பிரபலம் யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

Anjaneyar temple arjun sarja trending now durga stalin visits

நடிகரும் தீவிர ஆஞ்சநேயர் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலை கட்டியுள்ளார்.

Anjaneyar temple arjun sarja trending now durga stalin visits

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கோவில் அர்ஜூனின் 17 வருட கனவு என்று கூறப்படும் நிலையில் பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டையை செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை, அயோத்தியில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் நிலைகொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள், அர்ஜூனின் இந்த அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து தரிசனம் பெற்றதுடன் அர்ஜூன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இந்த கோவிலின் ஆஞ்சநேயர் சிலை 200 டன் எடையும் 28 அடி உயரமும் கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ALSO READ: தல அஜித்தின் வலிமை.. அடேங்கப்பா!! ரிலீஸ்க்கு முன்பே இப்படி ஒரு சாதனையா? கொல மாஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Anjaneyar temple arjun sarja trending now durga stalin visits

People looking for online information on Arjun Sarja, Arjun temple, Chennai, Trending will find this news story useful.