டும் டும் டும் கொட்டிய சீரியல் நடிகை! வாழ்த்திய சின்னத்திரை ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செம்பட்டு என்ற சீரியலில் நடிகை அறிமுகமானவர் நடிகை சுவாதி நித்யானந்த். தொடர்ந்து பல மலையாளத் சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

tv actress swathi nithyanand married her lover pratheesh

பிரமணம் என்ற நெடுந்தொடர் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதில் அவர் ஏற்று நடித்திருந்த ஹரிதா என்ற கதாபாத்திரம் அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. தற்போது லாக்டவுன் காலகட்டத்தில் திரையுலகம் மற்றும் சின்னத்திரை முடங்கியிருக்க, தொலைக்காட்சி தொடர்களின் ஷூட்டிங் சில விதிமுறைகளுடன் தொடங்கிவிட்டன.

இந்நிலையில்  நடிகை சுவாதி நித்யானந்த் நேற்று மே 30 பிரதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரமணம் தொடரின் ஒளிப்பதிவாளர் பிரதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் காதலித்து வந்ததனர். லாக்டவுன் காலகட்டம் என்பதால் இவர்களின் திருமணம் எளிமையாக கேரளாவிலுள்ள ஒரு கோயிலில் நடைபெற்றது.

சுவாதி பிரதீஷ் தம்பதிருக்கு தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

tv actress swathi nithyanand married her lover pratheesh

People looking for online information on Covid 19, Lockdown, Serial Actress, Swathi will find this news story useful.