www.garudabazaar.com

"என்ன TSK.. ஹர்திக் பாண்டியா கூட வீடியோ காலா? 😂".. சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பும் பதிவு!!...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர் TSK. திருச்சியை சேர்ந்த இவர், பல பிரபலங்களின் குரல்களில் அப்படியே அசத்தலாக மிமிக்ரி செய்து பலரையும் வெகுவாக கவர்ந்தவர்.

TSK latest fun video speaking video call with hardik pandya

Images are subject to © copyright to their respective owners

பட்டையை கிளப்பும் TSK..

அது மட்டுமில்லாமல், மிகச் சிறப்பாக டைமிங் காமெடி செய்வதிலும் கில்லாடியான TSK, அசாருடன் சேர்ந்து செய்த காமெடி அமர்க்களங்கள், எப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தவிர பெட்ரோமேக்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் TSK நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு டப்பிங்

மேலும், தற்போது விஐய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4 சீசனிலும் போட்டியாளராக TSK களமிறங்கி உள்ளார். அது மட்டுமில்லாமல், சமீபத்தில் ஹிந்தியில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கன்னா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருந்த Farzi வெப் சீரிஸின் தமிழ் டப்பிங்கில் நடிகர் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்து அவரை போலவே பேசி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் TSK.

TSK latest fun video speaking video call with hardik pandya

Images are subject to © copyright to their respective owners

காமெடி என்ற பெயரில், அனைவரையும் எப்போதுமே கலகப்பாக வைத்திருக்கும் TSK, தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் அடிக்கடி தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையும், கலகலப்பாக தோன்றும் வீடியோக்களையும் பகிரும் பழக்கத்தை தவறாமல் கடைபிடித்து வருகிறார்.

ஹர்திக் பாண்டியாவுடன் வீடியோ கால்..

அப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை குறிப்பிட்டு TSK பகிர்ந்துள்ள வீடியோ, இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

TSK latest fun video speaking video call with hardik pandya

Images are subject to © copyright to their respective owners

TSK பகிர்ந்துள்ள வீடியோவில், பின்பக்கம் ஹர்திக் பாண்டியா வீடியோ காலில் பேசுவது போன்று இருக்கும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவருடன் வீடியோ காலில் பேசுவதை போன்று உணர்வை தரும் வகையில், குட்டியாக தான் பேசும் வீடியோவை வலதுபுறம் மேலே வைத்துள்ள TSK, ஹர்திக் பாண்டியாவிடம், "ஹாய் மாப்ள, நல்லா இருக்கியா?. ஏன் மேட்ச்ல பார்க்க முடியல உன்னை. வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லு. ஐபிஎல் -ல பாப்போம் சரியா?" என பேசவும் செய்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tsk (@tsk_actor)

 

இரண்டு சம்மந்தம் இல்லாத வீடியோக்களை இணைத்து ஹர்திக் பாண்டியாவிடம் பேசுவது போன்ற வகையில், TSK உருவாக்கி உள்ள இந்த வீடியோ, தற்போது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

TSK latest fun video speaking video call with hardik pandya

People looking for online information on Hardik Pandya, TSK, Viral will find this news story useful.