www.garudabazaar.com

Ponnyin Selvan: பட்டையை கிளப்பும் டீசர்.. பிரம்மாண்ட PAN India படமாக ரிலீஸ் செய்யும் LYCA சுபாஸ்கரன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 10 ஜூலை 2022:- அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

Maniratnam Ponniyin Selvan Part 1 Teaser go viral

சோழன் வருகிறான்..

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

Also Read | "தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறோம்.. அப்படி என்ன நாம பெரியாள்னு கேட்டா தெரியாது!" - பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் கார்த்தி மாஸ் பேச்சு!

Maniratnam Ponniyin Selvan Pan India release LYCA Subhashkaran

லைகாவின் பிரம்மாண்ட பான் இந்திய வெளியீடு..

இப்படிப்பட்ட இந்த மாபெரும் வரலாற்றுப் புனைவுத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதன் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” திரைப்படத்தை, வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக, பான் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் பல முன்னணி திரைப்படங்களை தந்த, புகழ்பெற்ற ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன்.Maniratnam Ponniyin Selvan Pan India release LYCA Subhashkaran

தொடர் முன்னணி திரைப்படங்கள்..

சமீபத்திய ஹிட் திரைபடங்களாக லைகாவின் தயாரிப்பில் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதேபோல் நகைச்சுவை நாயகன் வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் எதிர்பார்ப்பு மிக்க ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "லாக்டவுன்ல உயிரை பணைய வெச்சு.." - பொன்னியின் செல்வன் பட விழாவில் AR ரஹ்மான் உருக்கம்

20 மில்லியன் பார்வைகளை கடந்த PS-1 டீசர்..

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம்பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் 5 மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது. 

Maniratnam Ponniyin Selvan Pan India release LYCA Subaskaran

இந்நிலையில், தற்போது இந்த டீசர் சுமார் 20 மில்லியன் பார்வைகள் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

Also Read | "நாமதான் பிளாக்பஸ்டர் கொடுத்துகிட்டே இருக்கோம்" - Ponniyin Selvan பட விழாவில் நடிகை திரிஷா பேச்சு..

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam Ponniyin Selvan Part 1 Teaser go viral

People looking for online information on A. Subashkaran, Aishwarya rai, AR Rahman, Karthi, Lyca Productions, LYCA Subashkaran, Mani Ratnam, Ponniyin Selvan Pan India release, PS-1, PS1, SOSs, Trisha will find this news story useful.