மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘அன்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

‘ஆதாமிண்டே மகன் அபு’, மம்மூட்டியின் ‘பத்தேமாறி’ போன்ற தேசிய விருது திரைப்படங்களை இயக்கிய சலீம் அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ’ திரைப்படம், சினிமா துறையில் இயக்குநராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க போராடும் இளைஞரை பற்றிய கதை. பணம், புகழ் என்பதை தாண்டி தனக்கு பிடித்த வேலையை இஷ்டப்பட்டு செய்யும் நினைத்து கடுமையாக உழைக்கும் இளைஞரின் வாழ்க்கை பின்னணியில் உருவாகியுள்ளது.
அலென்ஸ் மீடியா பேனரின் கீழ் சலீம் அஹமது தயாரித்துள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், சித்திக், லால், ஸ்ரீனிவாசன், சலீம்குமார், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மது அம்பட் ஒளிபதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிஜிபால் இசையும் அமைத்துள்ளார்.
அன்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ... - லாஸ் ஏஞ்சல்ஸில் மாஸ் காட்டும் மாரி நடிகர் வீடியோ