தமிழில் ‘மாநகரம்’, ‘மாயவன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷனுக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள Ninnu Veedani Needanu Nene என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் தெனாலி ராமகிருஷ்ணா என்ற படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஸ்டண்ட் காட்சியின் போது, சந்தீப் கிஷன் முகத்தில் இடது கண்ணிற்கு கீழ் கண்ணாடி பீஸ் கிழித்து ரத்தம் கொட்டியதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, கர்னூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட சந்தீப் தற்போது நலமாக இருப்பதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஸ்டண்ட் மேன் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
மேலும், இந்த விபத்திற்கு காரணம் ஸ்டண்ட் இயக்குநர் தான் என்று பரவிய வதந்தியையும் நடிகர் சந்தீப் கிஷன் தனது ட்வீட்களில் மறுத்துள்ளார்.
Hey guys..it was an unfortunate accident in a glass blast sequence..
A metal particle was stuck in my face right under my left eye & there was a lot of blood so ppl panicked..used to such stuff now & am ok..
The stuntman sustained a much deeper cut,wishing him a speedy recovery🙏🏽
— #NVNN 12th July (@sundeepkishan) June 15, 2019
Been reading a lot of articles that were blaming the Action Choreographer for the injury..request the media to not do so as it was not his fault 🙏🏽
It was a risky shot, I was aware of it & chose to be a part of it..
I m much better now and will start promotions for #NVNN soon..❤️
— #NVNN 12th July (@sundeepkishan) June 16, 2019