கடந்த மூன்று ஆண்டுகளில் மலையாள சினிமாவின் வியாபார எல்லை மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதுதற்கும், புதுப்புது வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருவதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பவர் மோகன்லால் தான்.
![Mohanlal’s lucifer Malayalam films crosses 200 crores creates new history Mohanlal’s lucifer Malayalam films crosses 200 crores creates new history](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/mohanlals-lucifer-malayalam-films-crosses-200-crores-creates-new-history-news-1.jpg)
50 கோடி வசூலை அடைவதற்கே திணறிக் கொண்டிருந்த மலையாள சினிமாவை, தனது புலி முருகன் படத்தின் மூலம் முதன்முதலாக நூறு கோடி என்கிற வசூல் கிளப்பில் இணைய வைத்தார் மோகன்லால்.
அதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஐம்பதாவது நாளை எட்டி இருக்கும் அவரது லூசிபர் திரைப்படம், தற்போது 200 கோடி என்கிற மாபெரும் வசூல் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்த உதவிய உலகெங்கிலுமுள்ள சினிமா காதலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் மோகன்லால்.
இந்தப்படம் மோகன்லாலுக்கு மற்றுமொரு சாதனை படம் என்றாலும் கூட முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகியுள்ள நடிகர் பிரித்விராஜூக்கு அவரது திரையுலக பயணத்தில் மகுடம் சூட்டும் படமாக அமைந்து விட்டது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.