Reliable Software
www.garudabazaar.com

'தளபதி65-ல்' இணையும் 'பிரபல' டான்ஸ் மாஸ்டர்!.. படப்பிடிப்பு தேதியுடன் அவரே வெளியிட்ட தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடித்துவரும் புதிய திரைப்படம் தளபதி65.

Jani Master joins in Vijay Thalapathy65 Nelson Dilipkumar

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதற்கு முன் நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரமலான் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/laughed-deepa-akka-editors-vere-level-sivaangi.html

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே இப்படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமானதாக அறிவிக்கப்பட்டார். பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்துக்கு பின்னர் தமிழில் இப்போது தளபதி65 படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தளபதி65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைகிறார். இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜானி மாஸ்டர், “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.  இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளதுடன், மே 3 முதல் 9 வரை, தான் நடனப்பயிற்சி அளிக்கும் பாடலுக்கு படப்பிடிப்பு நிகழவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "சிரிச்சுட்டேன்.. எடிட்டர்ஸ் வேற லெவல்"! .. CookWithComali2 பிரபலத்தை குறிப்பிட்டு சிவாங்கி Viral ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master joins in Vijay Thalapathy65 Nelson Dilipkumar

People looking for online information on Jani Master, Nelson Dilipkumar, Sun pictures, Vijay will find this news story useful.