மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை மம்தா மோகன்தாஸ்.. பீச்சில் நடத்திய HOT போட்டோஷூட்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மம்தா மோகன்தாஸ் மாலத்தீவில் இருந்து பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Also Read | தெறிக்கும் அனிருத் இசையில் தாய் கிழவி.. திருச்சிற்றம்பலம் படத்தின் தாறுமாறான 1st சிங்கிள்!
2006-ல் விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தொடர்ந்து குசேலன், 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
2005-ல் மயூகம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகையானார் மம்தா மோகன்தாஸ். அதேபோல் 2007-ல் யமதொங்கா என்ற தெலுங்குப் படம் மூலம் தெலுங்கு சின்னிமாவில் அறிமுகமானார்.
கடைசியாக தமிழில் விஷால் -ஆரியா நடித்த எனிமி படத்தில் நடித்திருந்தார் மம்தா மோகன்தாஸ். 2010ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா, அதன் பிறகு சரியான மருத்துவ ஆலோசனைப்படி வைத்தியம் எடுத்து குணமானார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதும் விடுபட்டு தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், பிருத்வி ராஜ், ஜெயராம், சுரேஷ் கோபி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக பிருத்விராஜூடன் ஜனகனமன படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் ஊமை விழிகள், மலையாளத்தில் அன்லாக் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றது. இந்நிலையில் மம்தா மோகன் தாஸ் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் உள்ள மாலி தீவில் தற்போது மம்தா தங்கியிருந்து அங்குள்ள கடற்கரை ரிசார்ட்டில் பிகினி உடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Also Read | துல்கர் சல்மான் - ராஷ்மிகா நடிக்கும் சீதாராமம்.. டீசர் ரிலீஸ் எப்போ? Romantic அப்டேட்