பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவரா... யாருமே எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. அதேபோல் பாலாஜி மற்றும் ஆரி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ரம்யாவிற்கும் ஆரிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்தது. இந்நிலையில் பாச மழைக்கு நிகராக வன்முறைகள் நிறைந்த வாரமாக இந்த வாரம் இருந்தது என்றே சொல்லலாம்.

This contestant to be evicted from biggboss ths weekபிக்பாஸ் இந்த வாரம் வெளியேறியது இவரா

இந்நிலையில் இம்முறை ரம்யா, சோம், கேப்ரியல்லா, ஆஜித் மற்றும் ஷிவானி ஆகியோர் நாமினேஷனில்  இருக்கின்றனர். இதனையடுத்து நேற்றைய தினம் கேப்ரியல்லா காப்பாற்றப்பட்டார். பலரும் ரம்யா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கருதி வந்தனர். ரம்யாவின் சகோதரரும் இதையேதான் வழிமொழிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆஜித் இம்முறை குறைவான ஓட்டுகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவரா... யாருமே எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

This contestant to be evicted from biggboss ths weekபிக்பாஸ் இந்த வாரம் வெளியேறியது இவரா

People looking for online information on Ajeedh, Biggboss will find this news story useful.