தனுஷின் அசுர பரிமாணம் ! பென்சில் மீசையிலும் முரட்டுத்தனம்! - ‘அசுரன்’ Second Look
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 22, 2019 06:23 PM
‘வட சென்னை’ திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வரும் அக்.4ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அசுரன் படத்தில் இடம்பெறும் முதல் சிங்கிள் பாடலான ‘கத்திரிப்பூவழகி’ என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘அசுரன்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை தொடர்ந்து பாடல்கள் மற்றும் டிரைலர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திர்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
#Asuran look 2 pic.twitter.com/3zCkH4vhED
— Dhanush (@dhanushkraja) August 22, 2019