Massive Breaking: உறுதியான 'எனை நோக்கி பாயும் தோட்டா'வின் ரிலீஸ் தேதி!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 24, 2019 01:18 PM
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கி தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்து உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில காரணங்களால் படத்தின் பணிகள் தாமதமாகின. இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாவது 500 % உறுதி என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.