கொரோனாவிடம் இருந்து Safety- ஆ இருப்பது எப்படி?, ஸ்பெஷல் மீமில் தல அஜித் சொல்றத கேளுங்க
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய காரணங்கள் தவிர வெளியில் வரவேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

இதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது வித்தியாசமான செயல்பாடுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட காவல்துறை மீம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வீரம் பட காட்சி ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அநத மீமில் கொரோனா பரவுது சேஃப்டியா இருப்போம் என சொல்ல, அதற்கு சிறுமி எப்படி uncle என்று கேட்கிறார். பதிலாக, வீட்டில் தனிமை அதுவே நம் வலிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் "தனிமை"
அதுவே நம் "வலிமை"#stayhome #Corona_Awareness #valimai #Thenidistrict #szsocialmedia1 #TNPOLICE pic.twitter.com/mzEOC5DoD5
— Theni District Police (@socialmediathe2) March 29, 2020