பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடன் ஷெரினை அழவைத்த வனிதா வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வனிதா, சாக்சி, கஸ்தூரி, அபிராமி மற்றும் சேரன் ஆகியோர் வந்துள்ளனர்.

Bigg Boss 3 2 Promo 1 Vanitha Sakshi Sherin Hotstar

இதனையடுத்து வனிதா சிறப்பு விருந்தினராக வந்தபோதிலும் மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். தர்ஷன் வெளியே போனதற்கு ஷெரின் தான் காரணம் என்றும், அது தான் போனபோது யாருக்கும் தெரியவில்லை என்றும் இரண்டு வாரங்கள் கழித்தே அனைவருக்கும் புரிந்தது என்றும் அதன் பிரதிபலிப்பே தர்ஷன் வெளியேறியது என்றும் வனிதா கூறினார்

வனிதாவின் இந்த கருத்துக்கு சாக்சி எதிர்ப்பு தெரிவித்தார். உடனே சாக்சியிடம் வனிதா சண்டைக்கு செல்ல, மற்றவர்கள் நமக்கென்ன? என்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். வனிதாவின் பேச்சை கேட்டு நொறுங்கிய ஷெரின் கதறி அழுகிறார்.

நேற்று வரை ஆட்டம், பாட்டு, என சந்தோஷமாக இருந்த பிக்பாஸ் வீடு, இன்று வனிதா வருகையில் மீண்டும் ரணகளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடன் ஷெரினை அழவைத்த வனிதா வீடியோ இதோ! வீடியோ