www.garudabazaar.com

இவருக்கு இவ்ளோ பெரிய மகனா? தங்கர் பச்சான் மகன் ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் செம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 15, பிப்ரவரி, 2022: தமிழ்த் திரைத்துறையில் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சான். ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றிய தங்கர் பச்சான் தம்முடைய திரைப்படங்களுக்காக மாநில அரசின் விருதுகளையும் குவித்திருக்கிறார்.

Thangar Bachchaan Son Vijith Bachchan new movie தங்கர் பச்சான்

தங்கர் பச்சான் படங்கள்..

பார்த்திபன், பிரபுதேவா, சேரன், சாந்தனு, நரேன், சீமான் என பல நடிகர்களை தமிழ் திரைப்படங்களில் தங்கர் பச்சான் இயக்கி இருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கத்திலான அழகி, பள்ளிக்கூடம்,  சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, தென்றல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய படங்கள்.

Also Read: ‘கண்ணே கலைமானே’ கமல் வெர்ஷன்.. BiggBoss-ல உருக வெச்சுட்டாருப்பா.. தீயாய் பரவும் ஆடியோ க்ளிப்

சாதாரண மனிதர்களின் வாழ்வியல்..

யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையில் இருக்கும் நுண் உணர்வுகளை காட்சிப்படுத்த முயற்சிக்கும் இவருடைய திரைப்படங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை நுட்பமாக பேசும் திரைப்படங்களாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. வெகுஜன மக்களின் அன்றாட நிகழ்வுகளை, இவருடைய திரைப்படங்களை உணர்வுபூர்வமாக காட்சிப் படுத்துவன.

தங்கர் பச்சானின் மகன்

நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கும் தங்கர் பச்சான், தான் இயக்கிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான், புதிய திரைப்படம் ஒன்றில் தோன்றியிருக்கிறார். டக்கு முக்கு திக்கு தாளம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, இயக்குநர் தங்கர்பச்சான் இயக்குகிறார்.

முதல் சிங்கிள்

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டபடி, தங்கர் பச்சானின் மகனும், இப்படத்தின் நாயகனுமான விஜித் பச்சான், நிற்கிறார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் டக்கு முக்கு என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகக் கூடிய செய்தியுடன் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Also Read: ப்பா...மாஸ்.. இயக்குநர் செல்வராகவன் எப்படி மாறிட்டாரு பாருங்க.. தீயாய் பரவும் "ஒற்றை ஃபோட்டோ"..

Thangar Bachchaan Son Vijith Bachchan new movie தங்கர் பச்சான்

People looking for online information on Thangar Bachchaan, Thangar bachchan, Vijith Bachchan will find this news story useful.