www.garudabazaar.com

BBUltimate Tamil: ‘கண்ணே கலைமானே’ உருக வெச்சுட்டாருப்பா கமல்.. தீயாய் பரவும் ஆடியோ க்ளிப்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 15, பிப்ரவரி 2022: சத்யஜோதி தியகாரஜன் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982 ல் வெளியான் திரைப்படம் மூன்றாம் பிறை.

Kanne Kalaimaane Kamalhaasan version heartmelt

மூன்றாம் பிறை

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திரா உருவாக்கிய தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்று என்று தமிழ் திரைப்பட கலைஞர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் இன்றளவும் பேசப்படும் திரைப்படம் தான் மூன்றாம்பிறை.

Also Read: நாயகனை 'அலேக்கா' தூக்கிகிட்டு கோயில் படி ஏறினாரா ‘முத்தழகு’ நாயகி?  உண்மையில நடந்தது இதான்  .. வைரல் ஆகும் BTS Video

பாலு மகேந்திரா

அண்மையில் இயக்குநர் பாலு மகேந்திராவின் நினைவலைகளை பலரும் நினைவுகூர்ந்து வந்த நிலையில், அடுத்து வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு இந்த திரைப்படம் வெளியாகி, 40-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திரையுலகில் பலரும் இந்த படத்தின் நினைவலைகளைக் கொண்டாட காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட்

இந்நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், தற்போது 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஓடும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சுஜா எலிமினேஷன்

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சில் இருந்து பிரபல போட்டியாளர் சுஜா எலிமினேட் ஆன காட்சிகளை அண்மையில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் சுஜா வெளியேறும் முன், நடிகர் கமல்ஹாசனை கண்ணே கலைமானே பாடலின் இரண்டு வரிகளை தனக்காக பாடுமாறு கோரிக்கை விடுக்க, கமல்ஹாசன் தன்னுடய குரலில் அந்த பாடலை மிகவும் உருக்கமாக பாடியுள்ளார்.

கமல்ஹாசன் குரலில் கண்ணே கலைமானே..

திரைப்பட பாடல்கள் பலவற்றையும் பாடியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் கண்ணதாசன் வரிகளில், ஜேசுதாஸ் பாடிய கண்ணே கலைமானே பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளது பலரையும் நெகிழவைத்துள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் என்று கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார்.

Also Read: ‘நான் யாரை ஏமாத்துறேன்? ஏன் என்ன மட்டும் எப்பவுமே இப்படி பண்றாங்க?’.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத வனிதா

தொடர்புடைய இணைப்புகள்

Kanne Kalaimaane Kamalhaasan version heartmelt

People looking for online information on Balu mahendra, BB Ultimate Tamil, Bigg Boss OTT, Jesudass, Kamal Haasan, Kanne Kalaimaane, Music, Songs, Suja, Sujal eliminated will find this news story useful.