"ஜல்லிக்கட்டுல ஜெயிச்சா கார் பரிசா? .. பெட்ரோல் விக்கிற விலைக்கு .. தங்கர் பச்சான் கருத்து!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? என இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து பாலமேட்டிலும் பின் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அதிக காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கு இயக்குனர் தங்கர் பச்சான் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசுக்கு புதிய ஆலோசனையும் அளித்துள்ளார். அந்த அறிக்கையில், "சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.
வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Writer Vela Ramamurthy About Madurai Jallikattu
- Ilairaaja To Compose Music For SusiGanesa Madurai Based Movie
- 50% Theatre Occupancy For RRR & Valimai In Tamil Nadu
- Actress Amala Paul Granted GOLDEN VISA By DUBAI GOVERNMENT
- MK Stalin Pays Last Respect To Singer Manikka Vinayagam.
- Ajith Fans Involved In Public Service In Madurai
- Maanaadu Movie 3 Days Tamil Nadu Box Office Collection
- Valimai Theatre Booking Started In Madurai City Area
- Famous Actor Open Letter To Tamilnadu Cm MK Stalin
- Allu Arjun Pushpa The Rise Tamil Nadu Theatrical Rights
- I Believe In MK Stalin - DOP PC Sreeram About Chennai Flood
- Dubai Government Granting Golden Visa To Boney Kapoor
தொடர்புடைய இணைப்புகள்
- "இயக்குனர் பாலாவின் இன்னொரு முகம் இதான்..!" நான் கடவுள் திருநங்கை #Shorts
- 90s மிட்டாய் செம Happy ஆகிட்டாரு மனுஷன் ❤️ Thangar Bachan
- "தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு" கொந்தளித்த கார்த்தி சிதம்பரம்
- "சிங்கம் புலிகளுக்கு மத்தியில் வாழும் செந்தில் தொண்டைமானின் ஜல்லிக்கட்டு காளை" #Shorts
- എം കെ സ്റ്റാലിനോട് PLUS TWO വിജയിപ്പിച്ച് തരാൻ അപേക്ഷയുമായി യുവാവ് : VIRAL VIDEO
- "இந்த ஒரு விஷயம் மட்டும் ஜல்லிக்கட்டு களத்துல பண்ணவே கூடாது" முடக்கத்தான் மணி | #Shorts
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் இவ்ளோ பெருமை? Secret சொல்லும் வர்ணனையாளர் #Shorts
- "இந்த ஒரு பரிசுக்காகவா ரேக்ளா ரேஸ் நடத்துறாங்க...?" ரேஸில் பறந்த காளைகள் | #Shorts
- "மாட்ட புடிச்சே ஆகணும்னு சுற்றி கைய கோர்த்துட்டு நிக்குறாய்ங்க" முடக்கத்தான் மணி #Shorts
- "ஐயா, எப்படியாவது 12th Pass பண்ணி விடுங்கய்யா.." கோஷமிட்ட மாணவர்கள்..! ஸ்டாலின் சொன்னது என்ன?
- Anchor தம்பி உங்க வயசு என்ன.., இவ்வளவு நுணுக்கமா கவனிச்சு இருக்கீங்க - Thangar Bachan
- "நம்மள ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்துறாங்கன்னு மாடுகளுக்கு தெரியும்" ஜல்லிக்கட்டு #Shorts