"சூர்யா பிள்ளைகள் தலை நிமிர்ந்து சொல்லலாம்..'ஜெய் பீம்' அப்படி ஓர் படைப்பு!" - தங்கர்பச்சான்!
முகப்பு > சினிமா செய்திகள்ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக இன்று நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஜெய் பீம்' திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தை இன்று பார்த்துவிட்டு நடிகர் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் படக்குழுவை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது.எத்தனையோ பேர் சட்டங்களைப்படித்தாலும் அண்ணன் சந்துரு போன்ற ஒரு சிலர் தான் வாழ்வு முழுதும் உயிர்வாழ்வதற்கே போராடும் ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களுக்காக அதை பயன்படுத்துகின்றனர்! இத்திரைப்படம் மக்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார அழுத்தங்களால் ராசாக்கண்ணு போன்ற அப்பாவி மக்களின் வாழ்வு பறிபோவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.
நான் அன்று சொன்னதை சூர்யா இப்பொழுது புரிந்திருப்பார் என நினைக்கிறேன்.அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இத்திரைப்படத்தை தலை நிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக்கொள்வார்கள்.இவரைப்போன்றே பெரு முதலீடு படங்களில் மட்டுமே நடிக்கும் மற்ற நடிகர்களும் மனது வைத்தால் இச்சமூகத்திற்கு தேவையான இது போன்ற சிறந்த படைப்புக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மக்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படத்தை சட்டம்-நீதி-காவல் துறையில் உள்ளவர்கள் கட்டாயம் காண வேண்டும்.கலை மக்களுக்கானது!அதை ‘ஜெய் பீம்’ சாதித்திருக்கிறது!! எனதன்பு சூர்யா,இயக்குநர் ஞானவேல்,அரங்கக்கலை இயக்குநர் கதிர் மற்றும் இத்திரைப்பட நடிப்புக்கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.- அன்போடு தங்கர் பச்சான் என குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "What Happened To Rajakannu Was Very Horrible...": 'Jai Bhim' Actor Manikandan Opens Up About His Role
- Director Pa Ranjith Appreciates Jai Bhim Movie Cast And Crew
- "Eyes Were Filled With Tears..." Kamal Haasan's Moving Message After Watching Suriya's 'Jai Bhim'
- Jai Bhim Manikandan Reveals Real Rajakannu Pain Exclusive Video
- Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie
- "My Heart Has Become Heavy...": Tamil Nadu CM MK Stalin About Suriya's 'Jai Bhim'
- MK Stalin Appreciates Jai Bhim Movie Cast And Crew
- Suriya Donates Fund To CM MK Stalin Jai Bhim Connect
- Actor Suriya Talk About JAI BHIM Movie & His Fans
- Karthi And Jyothika May Direct Movies Suriya Breaking Interview
- Pa Ranjith Heartfelt Words Jaibhim Title Suriya Exclusive Video
- When The Next Film With Jyothika Suriya Exclusive Answer
தொடர்புடைய இணைப்புகள்
- அசிங்கமா கூச்சமா இருக்கா பழங்குடியா நடிக்கன்னு பயங்கரமா அழுதாங்க | Manikandan Reveals | Jai Bhim
- ஓஹோன்னு அழுதாங்க 😭 Manikandan, Jai Bhim
- "Lockup Torture ரொம்ப கொடூரம்" 😭 Manikandan, Jai Bhim
- Jai Bhim Review
- "பா.இரஞ்சித் தான் காரணம்.. ஒரே வார்த்தை.. ஆச்சரியமா இருந்துச்சி..! Thanks சார்" -சூர்யா நெகிழ்ச்சி
- Suriya-Jo Pair பண்ணனும்னா இப்படி ஒரு Script-க்கு Waiting - SURIYA Surprises Fans
- Suriya, Vijay Sethupathi அசத்தல் படங்கள்... Award Confirm
- "தமிழக அரசின் அருமையான திட்டம்" சூர்யா சொன்ன அட்வைஸ்..! -மாணவர்களுக்கு வேண்டுகோள்
- "அந்த விஷயம் என்னை உறுத்திட்டு இருக்கு..." - SURIYA Reveals | JAI BHIM
- "Suriya Romba Perfect Ah Irukaanga"😍 - Jyothika's Untold Stories
- America-வுக்கு கடத்தப்பட்ட ஐம்பொன் சிலையை துணிச்சலாக மீட்ட Indian Police! - Prateep Philp IPS பேட்டி
- "NAGMA அக்கா செம வாலு..." Childhood Memories பற்றி மனம் திறந்த JYOTIKA..