www.garudabazaar.com

அதிர்ச்சி!.. மீண்டும் ஒரு பேரிழப்பு கண்ணீரில் திரையுலகம்! நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது உயிரிழந்துள்ளார்.

Thanga pathakkam and Bairavi actor Srikanth passes away

தமிழ்த் திரைத்துறையில் தொடரும் அடுத்தடுத்த இழப்புகளால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மற்றும் ஒரு பேரிழப்பாக பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது உயிரிழந்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த், தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகர். 1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் தான் நடிகர்  ஸ்ரீகாந்த் முதன் முதலில் அறிமுகமானார்.

தொடர்ந்து சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் முதல் பிற்கால கலையுலக ஜாம்பவான்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

குறிப்பாக சிவாஜி கணேசன் இயக்கத்தில் பல நாட்கள் வெற்றிகரமாக ஓடிய தங்கப்பதக்கம் திரைப்படத்திலும் சரி, ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்திலும் சரி ஸ்ரீகாந்த் நடித்த கேரக்டர் மறக்க முடியாதவை. அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Thanga pathakkam and Bairavi actor Srikanth passes away

People looking for online information on Actor Sreekanth, RIPSreekanth, RIPSrikanth, Sreekanth, Srikanth will find this news story useful.