'அதே குரல், குறையாத மாஸ்’ தலைவர் 168 ஓப்பனிங் சாங் பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 20, 2019 03:24 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகின்ற, பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள படம் 'தர்பார்'. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன் படி இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பு, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது.
அதே நாளன்று ’தலைவர் 168’ படத்துக்காக டி.இமான் இசையமைத்த பாடலும் ஒலிப்பதுவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலையும் ரஜினியின் ஆஸ்தான பாடகரான எஸ்பிபி பாடியுள்ளார். பேட்ட, தர்பார் படங்களில் தலைவருக்கு ஓப்பனிங் சாங் எழுதிய விவேக் இந்த பாடலை இயற்றி உள்ளார்.