www.garudabazaar.com

கர்ணன் படத்தை அடுத்து 'பிரபல மாஸ் ஹீரோவுடன்' கைகோர்க்கும் ரஜிஷா விஜயன்! யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கர்ணன் படம் பெரும் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜூடன் மீண்டும் கைகோர்க்கவிருப்பதாக தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

Karnan heroine Rajisha Vijayan joins Surya39 Gnanavel

இதனிடையே கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கும் இந்த படம் மூலமாக பாராட்டுக்கள் குவிந்தன. திரௌபதை எனும் பெயரில் வரும் ரஜிஷா விஜயன் கதா பாத்திரம் கவன ஈர்ப்பையும் தந்தது. 

Karnan heroine Rajisha Vijayan joins Surya39 Gnanavel

இந்நிலையில் கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் Surya39 படத்தில் ரஜிஷா விஜயன் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

முன்னதாக இந்த படத்துக்கான காட்சி ஒன்றில் சூர்யா வழக்கறிஞராக தோன்றும் ஸ்டில்கள் இணையத்தில் பிரபலமாகின. இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 திரைப்படத்தில் சூர்யா மும்முரமாக நடித்து வருகிறார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சுர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்ததுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியானது. 

அண்மையில் மறைந்த தமது ஆஸ்தான இயக்குநர் கே.வி.ஆனந்தின் மறைவுக்கு சூர்யா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் அந்த அறிக்கையில், “என் முதல் படத்தில் நீங்களும் (நேருக்கு நேர்) உங்கள் கடைசி படத்தில் நானும் (காப்பான்) பணிபுரிந்திருக்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.  இதனை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Karnan heroine Rajisha Vijayan joins Surya39 Gnanavel

People looking for online information on Dhanush, Gnanavel, Rajisha Vijayan, Suriya, Suriya39, Surya will find this news story useful.