Reliable Software
www.garudabazaar.com

கேப்டனை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்.. வெளியான பரபரப்பு ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் ஹீரோவாக சினிமா ரசிகர்களிடையே பிரபலமான உதயநிதி ஸ்டாலின் பின்னர் இளைஞரணி செயலாளராக அரசியல் வட்டத்தில் அறியப்பட்டார்.

udhayanithi stalin meets vijayakant to get blessings

இந்நிலையில் நடந்த இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக நின்ற உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த தேர்தலில் திமுக வென்றுள்ளதை அடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏவும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் .

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னதாக விருத்தாசலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் அதே தொகுதியில் இப்போது போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: 'ஸ்டாலின் தான் வராரு!'... ஹிட் அடித்த திமுக பாடலுக்கு இவர்தான் மியூசிக் டைரக்டரா? Exclusive பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

udhayanithi stalin meets vijayakant to get blessings

People looking for online information on Premalatha Vijayakanth, Udhayanidhi Stalin, Vijayakanth will find this news story useful.