www.garudabazaar.com

'போடு ரகிட ரகிட!'.. தனுஷை இயக்கும், முதல் படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தின் மாஸான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Dhanush Sekhar Kammula join hands for dhanush multilingual

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் தனுஷ். வணிகரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர் என்றே சொல்லலாம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் நாராயண் தாஸ்.கே.நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார். இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

ALSO READ: யூடியூபில் ஆபாசமாக பேசிய விவகாரம்!.. தலைமறைவாக இருந்த 'PUBG' மதன் 'அதிரடி' கைது!

Dhanush Sekhar Kammula join hands for dhanush multilingual

People looking for online information on Dhanush, SekharKammula will find this news story useful.