தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பட ஃபேன் மேட் போஸ்டரை வெளியிட்டு பிரபல இயக்குநர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்'மேயாத மான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்ன குமார், 'மாஸ்டர்' படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து மாஸ்டர் படம் பற்றிய அவரது பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உருவாக்கிய 'மாஸ்டர்' பட ஃபேன் மேட் போஸ்டரை பகிர்ந்த இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்துகள் தெரிவித்தார், பின்னர் அந்த பதிவில் பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னாவை குறிப்பிட்டிருந்தார். அதற்கு கோபி பிரசன்னா நைஸ் என்று கமெண்ட் செய்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படம் ஏப்ல் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
LIT🔥🔥👌👌. #Master . Check this fan made poster @gopiprasannaa bro.🙌 pic.twitter.com/QWIOXoNLob
— Rathna kumar (@MrRathna) February 22, 2020