புஷ்பவனம் குப்புசாமி , மனைவிக்காக பாடிய ரொமான்டிக் பாட்டு - ஆரவாரமான தருணம்
முகப்பு > சினிமா செய்திகள்நாட்டுப்புற பாடல்களை தனித்துவமான குரலில் பாடி புகழ் பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் எண்ணற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இளையராஜா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் இசையில் அவர் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. அவரது மனைவி அனிதா குப்புசாமியும் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திரைப் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர்.
இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் Behindwoods Gold Mic Music Award நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புஷ்வனம் குப்புசாமிக்கு தி ஐகான் ஆஃப் தி இன்ஸ்பிரேஷன் - தமிழ் ஃபோக் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தனது மனைவி அனிதாவை பார்த்து நாட்டுப்புற காதல் பாடல் ஒன்றை பாட அவர் மேடைக்கு வந்தார். பின்னர் இருவரும் பாடல் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். புஷ்பவனம் குப்புசாமிக்கு பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் விருது வழங்கி பாராட்டி பேசினார்.
புஷ்பவனம் குப்புசாமி , மனைவிக்காக பாடிய ரொமான்டிக் பாட்டு - ஆரவாரமான தருணம் வீடியோ