VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

VIDEO: விஜய் நடிப்பில் "யோஹன் அத்தியாயம் ஒன்று" ஸ்டேட்டஸ் என்ன?.. மனம் திறந்த கௌதம் மேனன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் தகவலை பகிர்ந்துள்ளார்.

Gautham Menon about Thalapathy Vijay Yohan Part One

Also Read | மகிழ்ச்சி வெள்ளத்தில் "மாமன்னன்" உதயநிதி.. மாரி & வடிவேலுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தினை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் நாளை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Gautham Menon about Thalapathy Vijay Yohan Part One

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Gautham Menon about Thalapathy Vijay Yohan Part One

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் தகவலை கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.

Gautham Menon about Thalapathy Vijay Yohan Part One

கௌதம் மேனன் பேசியது, "அந்த படத்தின் கதை அப்படியே உள்ளது. அந்த படம் நடக்கும் என டிசைன் இருந்தால் கண்டிப்பாக நடக்கும். அதற்காக நானும் சில முயற்சிகள் மேற்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'வெந்து தணிந்தது காடு' FDFS.. தமிழகம் முழுவதும் மாஸ் காட்டும் சிம்பு! இது வேற லெவல் சாதனை

VIDEO: விஜய் நடிப்பில் "யோஹன் அத்தியாயம் ஒன்று" ஸ்டேட்டஸ் என்ன?.. மனம் திறந்த கௌதம் மேனன்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Menon about Thalapathy Vijay Yohan Part One

People looking for online information on Gautham Menon about Yohan Part One Updates, Gautham Vasudev Menon, Thalapathy Vijay, Vijay, Yohan Part One Movie will find this news story useful.