எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' Sneak Peek படத்தின் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 'கேப்மாரி' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

Jai, Athulya, Vaibhavi Capmaari Sneak Peek Directed by SA Chandrasekhar

மேலும், இப்படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தற்போது தணிக்கைக்குழு ‘ஏ’சான்றிதழை வழங்கியுள்ளது.

இந்த படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 70வது திரைப்படம் என்பதும், நடிகர் ஜெய்க்கு இது 25வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது  படத்தின் Sneak Peek என்னும் சில நிமிட காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது மேலும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.