வைபவ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணையும் ஃபேண்டஸி படத்தின் முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆலம்பனா'. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Vaibhav's Aalambana Movie Pooja to happen on 14th December

இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

மேலும் முனிஷ்காந்த்,  பட்டிமன்ற பிரபலம் திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், முரளி சர்மா, கபீர் துஹான் சிங்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

வினோத் ரத்தினசாமி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஷான் லோகேஷ் இந்த படத்தின் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். இந்த படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது.