www.garudabazaar.com

''தலைவன் படம் பார்க்காமலே போறேன்'' - தளபதி ரசிகரின் பதிவு வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RIPBala என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. மேலும் அவரின் ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. அதில், "தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்" என்று கூறி, நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு "லவ் யூ தலைவா" என்று பகிர்ந்துள்ளார்.

Thalapathy Vijay fan committed suicide , RIP Bala hashtag Trending | தற்கொலை செய்து கொண்ட தளபதி ரசிகர், வைரலாகும் ட்விட்டர் பதிவு

இதனையடுத்து பிரபலங்கள் பலரும் பாலாவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், "RIP பாலா, உனது பிரச்சனை என்னவென்று எனக்கு தெரியாது.

ஆனால் அதற்கு தற்கொலை முடிவல்ல. உனது கனவுகள், ஆசைகள் எல்லாம் ஒரு நொடியில் முடிவுக்கு வந்தது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார். பாலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், மறைந்த பாலாவின் குடும்பத்தினரிடம் ஃபோனில் பேசியுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாலாவின் மறைவுக்கு நடிகர் விஜய் அவரின் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay fan committed suicide , RIP Bala hashtag Trending | தற்கொலை செய்து கொண்ட தளபதி ரசிகர், வைரலாகும் ட்விட்டர் பதிவு

People looking for online information on RIPBala, Thalapathy, Vijay will find this news story useful.