வெறித்தனம்! 'பிகில்' படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 28, 2019 03:05 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
![Thalapathy Vijay Bigil TamilNadu Box Office Collection Thalapathy Vijay Bigil TamilNadu Box Office Collection](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thalapathy-vijay-bigil-tamilnadu-box-office-collection-photos-pictures-stills.png)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் கொண்டாடி வருகின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 64.96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது