www.garudabazaar.com
iTechUS

வெளியூர் கிளம்பிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி .. தளபதி 67 படத்துக்காகவா? வைரலாகும் Fans கமெண்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Fans Comment in Amala Shaji Instagram Post about Thalapathy 67

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. மாறுபட்ட லுக்கில் பார்வதி பகிர்ந்த வைரல் BTS ஃபோட்டோஸ்

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Fans Comment in Amala Shaji Instagram Post about Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Fans Comment in Amala Shaji Instagram Post about Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பிரபலமான அமலா ஷாஜி, இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் ஒரு ரசிகர், "தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்கு செல்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அந்த கேள்வியை அமலா ஷாஜி அந்த பதிவில் Pin செய்தார்.

Fans Comment in Amala Shaji Instagram Post about Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners.

இதனால் சமூக வலைத்தளங்களில் தளபதி 67 படத்தில் அமலா ஷாஜி நடிக்கலாம் என ரசிகர்கள் பேசி வந்தனர். இன்னும் சில ரசிகர்கள் அமலா ஷாஜி, படத்தில் இருந்திருந்தால் படக்குழு சென்ற தனி விமானத்தில் சென்றிருப்பார். எனவே அமலா தளபதி 67 படத்தில் இடம்பெறவில்லை என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

தளபதி 67 படத்தில் அமலா ஷாஜி நடிப்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Vijay Antony : உடல்நிலை குறித்த தகவலுடன் பிச்சைக்காரன் -2 அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

வெளியூர் கிளம்பிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி .. தளபதி 67 படத்துக்காகவா? வைரலாகும் FANS கமெண்ட்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Fans Comment in Amala Shaji Instagram Post about Thalapathy 67

People looking for online information on Amala shaji, Amala Shaji Instagram Post, Thalapathy 67 will find this news story useful.