தல அஜித்தின் ‘வலிமை’ கெட்டப் இதுவா? - வைரலாகும் புகைப்படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 21, 2019 02:25 PM
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 60’ திரைப்படத்திற்காக அஜித் வைத்துள்ள புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் ‘வலிமை’ படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்காக அஜித்தின் ஆஸ்தான லுக்கான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட லுக்கில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துக் கொள்ள டெல்லி சென்ற போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, தற்போது அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் மறுபடியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான மீசையுடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் மற்ற திரைப்படங்களை போலவே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ‘வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.