ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடிக்கும் 'நான் சிரித்தால்' பட ஷூட்டிங் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 21, 2019 02:24 PM
'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, 'தனி ஒருவன்', 'கவன்', 'இமைக்கா நொடிகள்' படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். பின்னர் மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த நட்பே துணை திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது அவர் நான் சிரித்தால் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி தனது அவ்னி மூவிஸ் சார்பாக தயாரித்து வருகிறார்.
இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தை ராணா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
Tags : Hiphop Tamizha, Nan Sirithal, Sundar C