www.garudabazaar.com

துல்கர் சல்மானே வெளியிட்ட 'குருப்' படத்தின் OFFICIAL பாக்ஸ் ஆபிஸ் வசூல்! எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான 'குருப்'  படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Dulquer Salmaan Kurup movie box office official report

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் அசத்தலான நடிப்பு, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் துல்லியமான இயக்கம், நிமிஷ் ரவியின் கச்சிதமான ஒளிப்பதிவு, சுஷின் ஷாமின் துள்ளலான இசை என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

Dulquer Salmaan Kurup movie box office official report

எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் 'குருப்' வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியானது 'குருப்'. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்த படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், 35000 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாகவும் நடிகர் துல்கர் சல்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Dulquer Salmaan Kurup movie box office official report

இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Kurup movie box office official report

People looking for online information on குருப், Dulquer salmaan, Kurup will find this news story useful.