www.garudabazaar.com

வாவ்.. தல அஜீத் யாரை சந்திச்சிருக்காரு பாருங்க.. ‘வேற லெவல் ப்ளான்’ இருக்கோ? .. செம்ம Trending ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தல’ அஜீத்தை கடைசியாக 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்திருந்ததை காண முடிந்தது.

thala ajith with world motor bike holder Maral Yazarloo

நடிகர் கார்த்தி நடிப்பில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை இயக்கியதன் பிறகு, எச்.வினோத் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப் படத்தை தமிழில் இயக்கினார். இந்தியில் ‘அமிதாப் பச்சன்’ நடிப்பில் ஹிட் அடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப் பூர்வ தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ‘தல’ அஜீத்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் நடித்தனர்.

இதனை அடுத்து இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில், தல அஜீத் நடிப்பில், அடுத்து வரவிருக்கும் ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான ‘வலிமை’ படத்தில், ‘தல’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனிகபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரின் தயாரிப்பிலான நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு நடிகர் அஜீத் மற்றும் இயக்குநர் எச்.வினோத் இணையும் வலிமை படம் இந்த காம்போவின் 2வது படம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ‘நாங்க வேற மாரி’ சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனிடையே ரஷ்யாவில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, படக்குழுவினர் இந்தியா திரும்பினர். 

இந்நிலையில் ‘தல’ அஜித் புகழ் பெற்ற பிரபல மோட்டார் பைக்கிங் உலக சாதனையாளர் ஒருவரை சந்தித்துள்ள புகைப்படத்தை, மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா (தல அஜீத்தின் மேலாளர்)  பகிர்ந்ததை அடுத்து, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிரபல பைக் ரைடரும், உலக சாதனையாளருமான மாரல் யாசர்லூ உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். சுமார் 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் கடந்து சென்ற இவரைதான் ‘தல’ அஜித் டெல்லியில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பினை ‘தல’ அஜீத், மாரல் யாசர்லூவின் அனுபவங்களை அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் தனது மோட்டார் பைக் சுற்றுப் பயணத்தை உலகம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிடுவதற்காக அவருடைய ஆலோசனைகளைப் பெறவும் நிகழ்த்தினார்.

டாக்டர் மாரல் யாசார்லூ-பேட்ரிக் ஒரு ஈரானியில், பிறந்த மோட்டார் பைக்கிங் உலக சாதனை படைத்தவர், ஃபேஷன் டிசைனர், கலைஞர், மார்க்கெட்டிங் ப்ரொஃபஷனல், மோட்டிவேஷனல் பேச்சாளர் மற்றும் பெண்ணியவாதி ஆவார்.

Also Read: இந்தா வந்துருச்சுல்ல... BiggBoss சீசன் 5 ஒளிபரப்பு தேதி!.. இனி ரகளைதான்.. வெளியான ’அடடே’ ப்ரோமோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

thala ajith with world motor bike holder Maral Yazarloo

People looking for online information on Ajith Kumar, Maral Yazarloo, Valimai will find this news story useful.