தல அஜித் பாடகிக்கு குழந்தை பிறந்தது... போட்டோவை வெளியிட்டு மகிழ்ச்சி... வாழ்த்தும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. நாளுக்குநாள் துக்க செய்திகளும் சோக செய்திகளும் அதிகரித்து வரும் நிலையில், சில செய்திகள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. அப்படியாக ஒரு சில நல்ல சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் தல அஜித் படத்தின் பாடகி ஸ்வேதா பண்டித் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதியினர் தங்களது குழந்தைக்கு இஷாரா என்று பெயரிட்டுள்ளனர்.
2016-ஆம் ஆண்டு தனது காதலரான இவானோவை மணந்த அவர் தற்போது இத்தாலியில் வசித்து வருகிறார். ஸ்வேதா பண்டிட் பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் குறிப்பாக தல அஜித்தின் பில்லா 2 படத்தில் வரும் இதயம் இந்த இதயம், பியார் பிரேமா காதல் படத்தில் வரும் I will never let you go போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.